எகிப்திய-கத்தார் மத்தியஸ்த முயற்சிகளுக்கு பலனளிக்கும் விதமாக, உடல்நலக் காரணங்களுக்காக தாங்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த மேலும் இரண்டு வயது முதிர்ந்த பெண்களை விடுதலை செய்ததாக பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிக் குழுவின் ஆயுதப் பிரிவு திங்களன்று அறிவித்தது .மனிதாபிமான மற்றும் மோசமான உடல்நிலை காரணங்களுக்காக அவர்களை விடுவிக்க முடிவு செய்தோம்.” விடுதலை செய்யப்பட்டவர்கள் நூரித் யிட்சாக் மற்றும் யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் என்று கண்டரையப்பட்டுள்ளதாக ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறினார் .
ஹமாஸ் போராளிகள் அக். 7 எல்லை தாண்டிய தாக்குதலை நடத்திய கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்கத் தாய் மற்றும் மகள் ஜூடித் மற்றும் நடாலி ரானன் ஆகியோரை வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் இரு பெண்களை விடுவித்துள்ளனர் . காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் 5,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் ஹமாஸ் போராளி குழுவினர் தெரிவித்துள்ளனர் .
கத்தார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து “நிர்பந்தமான மனிதாபிமான” காரணங்களுக்காக இரண்டு பெண்களும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு அமெரிக்கப் பெண்களான ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் காசா மற்றும் எகிப்து இடையேயான ரஃபா எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .
மேலும் 50 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கலாம். செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் இரட்டை குடியுரிமை கொண்ட பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக காசாவுக்குச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
திங்களன்று டெல் அவிவ் பணயக்கைதிகளின் எண்ணிக்கையை 222 ஆக உயர்த்தியுள்ளது. ஹமாஸை அகற்ற “ஓயாத தாக்குதல்களுக்கு” தயாராகி வருவதாக இஸ்ரேலின் இராணுவம் எச்சரித்த நிலையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா “மனித உயிர்களை பலிவாங்கும் இஸ்ரேலிய இராணுவம் கண்டிப்பாக பாதிப்புக்கு உலகும் என்று கருது தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் ஹமாஸ் நடத்திய மிக மோசமான தாக்குதலில் ஒன்றாக சமீபத்தில் ஹமாஸ் நிகழ்த்திய தாக்குததில் 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட புதிய தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் திங்களன்று கூறியதுடன், ஸ்ட்ரிப்பில் இறப்பு எண்ணிக்கை 5,000 ஆக உயர்ந்துள்ளது என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இறப்பு எண்ணிக்கையில் 2,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மனிதாபிமான இடை நிறுத்தத்திற்கான அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது, காசா போர் நிறுத்தம் ஹமாஸுக்கு நன்மை பயக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
போர்நிறுத்தம் குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் “ஹமாஸுக்கு ஓய்வெடுக்கவும், மீண்டும் செயல்படவும், இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடரத் தயாராகவும் இருக்கும்” என்று அவர் பேசினார் .
மேலும் ஹமாஸ் தனது அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தால் மட்டுமே காசா போர் நிறுத்தம் பற்றிய எந்த விவாதமும் நடைபெறும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருக்கிறார் .
பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை எங்களுக்கு விடுவித்து தர வேண்டும் அதன் பிறகு சமாதான பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யலாம் ,என்று ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .