பிசிக்ஸ் ஸ்பின்னர் கின்னஸ் ரெக்கார்டு படைத்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் சாதனை. தோப்புக்கரணம் போடுவதால் உடலும் மனதும் அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். தொடர்ந்து சாதனையை நோக்கி சென்றால் கண்டிப்பாக சாதனையை அருகிலேயே கொண்டு வந்து விடலாம்.
திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகராட்சி மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கின்ற மக்கள் சுற்றுலாவையும் விவசாயத்தையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட ஆனந்தகிரி நாலாவது தெருவில் குடியிருந்து வருபவர் ஆயுர்வேதிக் மருத்துவர் அஜய். இவரது மகன் பிரசன்னா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பிசிக்ஸ் ஸ்பின்னர் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என தொடர் முயற்சியால் 2023 ஆம் ஆண்டு ஒரு கையால் பிசிக்ஸ் ஸ்பின்னர் 39 முறை சுழற்றி கின்னஸ் சாதனை படைத்து ஏற்கனவே 35 முறை சுழற்றியது சாதனையாக இருந்து வந்த நிலையில் மற்றொருவரின் சாதனையை 39 முறை சுழற்றி முறியடித்துள்ளார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு ஒரு நிமிடத்தில் இரண்டு கைகளால் 21 முறை கைகளை சுழற்றி பிசிக்ஸ் பின்னர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கொடைக்கானல் மலை பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவு குளிர் மற்றும் மழைக்காலம் என ஒன்பது மாதங்கள் கடந்து விடும். மூன்று மாதங்கள் மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு மிகப்பெரிய சோதனை இருந்து வரும் சூழ்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள மாணவர் 2018 ஆம் ஆண்டு ஒரு கின்னஸ் சாதனை .தற்போது மீண்டும் ஒரு கின்னஸ் ஆணையினை தொடர்ந்து சாதனையை படைத்து வருகிறார்.

மேலும் மாணவர்களுக்கு அவர் கூறும் பொழுது தினமும் நமது தாத்தா, பாட்டி வைத்தியம் போல் பழைய முறையில் தோப்புக்கரணம் தொடர்ந்து போடுவதால் மூளை நல்ல வேலை செய்யும் உட்கார்ந்து எந்திரிப்பதால் ஜிம்முக்கு போக தேவையே இல்லை. உடலும் நல்ல வலுப்பெறும் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் வலுபெரும். தினமும் காலையிலும் மாலையும் தூக்கி போட்டால் போதும் என மாணவர்களுக்கு சொல்கிறார். படிப்பவர்கள், விளையாடுபவர்கள் அனைவரும் முட்டி போட்டாலே எதையும் சாதிக்கலாம். தொடர்ந்து சாதனையை நோக்கி சென்றால் கண்டிப்பாக சாதனையை அருகிலேயே கொண்டு வந்து விடலாம் என்றும் இயல்பாக கூறுகிறார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கல்லூரி மாணவர் பிரசன்னா.