Gudiyatham : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு – தீயணைப்புத் துறையினர் மீட்பு..!

1 Min Read

வேலூர் மாவட்டம், அடுத்த குடியாத்தம் அருகே டிபி பாளையம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் விளை நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீடுகளில் 5 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

ஆனந்தன் சொந்தமான பசு மாடு விவசாய நிலத்தில் மேய்ச்சலின் போது விளை நிலங்களில் விவசாய கிணற்றில் தவறி விழுந்தன. கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு அலறல் சத்ததை கேட்டு ஆனந்தன் வந்து பார்த்த போது பசு மாடு கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு – தீயணைப்புத் துறையினர் மீட்பு

உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து பசுமாடை மீட்க முயற்சி செய்த போது மீட்க முடியாமல் குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விவசாய கிணற்றில் இறங்கி கயிறு கட்டி,

தீயணைப்புத் துறையினர்

பொதுமக்கள் உதவியுடன் டிராக்டர் மூலம் பசுமாட்டை சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். கிண்ற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் நிகழ்ந்தது.

Share This Article
Leave a review