தஞ்சை அரண்மனைக்கு வந்த ஆளுநர் ஆர் என் ரவி – சரபோஜி மன் …

The News Collect
2 Min Read
  • தஞ்சை அரண்மனைக்கு வந்த ஆளுநர் ஆர் என் ரவியை சரபோஜி மன்னரின் வாரிசுகள் பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.

இரு வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என் ரவி தஞ்சை வந்துள்ளார். தஞ்சை அரண்மனைக்கு வந்த அவரை மன்னர் சரபோஜி வாரிசுகளான அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே குடும்பத்தினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

- Advertisement -
Ad imageAd image

பின்னர் மன்னர் வீட்டிற்குள் உள்ள சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்தில் ஆளுநர் ரவி மற்றும் அவரது மகன் வழிபட்டனர். அங்கு ஆளுநர் வருகைக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இதனைத் தொடர்ந்து சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள மினி திரையரங்கில் தஞ்சை மாவட்டம் பற்றிய ஆவண குறும்படத்தை பார்த்தார்.

பின்னர் சரஸ்வதி மஹால் அலுவலகத்தில் உள்ள அரிய கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளஅருங்காட்சியகம் மற்றும் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ள நூலகம் ஆகியவற்றை தனது மகனுடன் ஆளுநர் ஆர் என். ரவி பார்வையிட்டார்.

மாலை தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு நந்தியம் பெருமானை வழிபடுகிறார். தஞ்சை அரண்மனை என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரில் உள்ள ஒரு அரண்மனை ஆகும்.

இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் பொ.ஊ. 1674 இல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது. இந்த அரண்மனை வளாகத்தில்தான் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.

வரலாறு : இந்த அரண்மனையானது தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்களான சேவப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது ஆகும். தஞ்சாவூர் மராத்திய அரசு மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன.

பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரித்தானிய, பிரான்ஸ், இராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. இந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/the-tragedy-of-carrying-the-bodies-of-the-dead-near-orathanadu-down-into-the-river-peoples-demand-to-build-a-bridge/

மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில், இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Share This Article
Leave a review