சட்டசபையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் – அமைச்சர் ரகுபதி..!

3 Min Read

தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் உள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை அரசே நியமிக்க வகையில் செய்யும் சட்ட மசோதா உள்பட 10 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த மசோதாக்களை அவர் கடந்த மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மறு ஆய்வு செய்து நிறைவேற்றும் அரசினர் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்தார். குறள் வாக்கெடுப்பு மூலம் இந்த பத்து சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சர் ரகுபதி

உடனடியாக கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் கவர்னர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும். மூன்று ஆண்டுகளாக கவர்னர் ஆர். என். ரவி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் கவர்னர் ஆர். என். ரவி தமிழக அரசு மீண்டும் அனுப்பி உள்ள சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவலை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறினார். இது தொடர்பாக அவருடைய பேட்டி பின்வருமாறு; தமிழர் கவர்னருக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (நேற்று) விசாரணைக்கு வருகிறது.

பத்து மசோதாக்களை நாங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். அவர் அதை திருப்பி அனுப்புவதற்கு முன்பு என்னென்ன காரணங்களுக்காக திருப்பி அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தால், அதற்குரிய விளக்கங்களை நாங்கள் தந்திருப்போம். ஆனால் அவர் சும்மா அனுப்பினார். தற்போது தமிழக அரசு சட்டசபையில் மீண்டும் அந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியதுடன் அவர் ஒப்புதல் தர வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார். ஆனால் அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி இருப்பதாக ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார்கள். தொடர்ந்து காலதாமதம் செய்ய வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறாரே? தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறி போய் விடக்கூடாது என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு கவர்னர் வருகிறது என்று தெரியவில்லை. ஒரு மாநில அரசுக்கு துணைவேந்தரை கூட நியமிக்கும் அதிகாரம் கிடையாது என்று நினைப்பது எந்த அடிப்படையில் நியாயம் என்று புரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் முதலமைச்சர் ஒரு குழுவை நியமிக்கிறார்.

அமைச்சர் ரகுபதி

அந்தக் குழுவில் கவர்னரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி இருக்கிறார்கள். இந்த குழு தான் துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரை செய்தது. அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் கவர்னர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. மக்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். மாநில சட்டசபையில் இரண்டாவது முறையாக மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு கவர்னர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பாகும். ஆனால் கவர்னர் ஆர். என். ரவி தமிழக சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதி பரிசீலனுக்கு அனுப்பி வைத்திருப்பது விவாத பொருளாகி உள்ளது.

Share This Article
Leave a review