அரசு அதிகாரிகள் வேலை செய்வதே கிடையாது – முதல்வர் ரங்கசாமி பேச்சு..!

3 Min Read

புதுவையில் அரசு அதிகாரிகள் வேலை செய்வதே கிடையாது என அரசு விழாவில் முதல்வர் ரங்கசாமி பரபரப்பாக பேசி உள்ளார். புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் கொள்முதல் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சிகளில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில்;

- Advertisement -
Ad imageAd image

இது ஒரு நல்ல திட்டம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த திட்டம். கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும்போது நவீன தொழில்நுட்பம் மூலம் என்ன செய்யலாம் என சிந்திக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினேன். கழிவுநீர் வாய்க்கால் கட்டைகளை எடுத்து போட்டுவிட்டு அதிலிருந்து மண்ணை எடுத்து சாலை நெடுக்கிலும் 4 நாட்களாக போட்டுள்ளனர். புதுவை முழுவதும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அசிங்கமாக உள்ளது. இந்த திட்டத்தை பற்றி பல ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். தற்போதைய இது செயல் வடிவமாக வரும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இது ஒழுங்காக நடக்குமா என்பது எனக்கு தெரியாது. பொறியாளர்கள் தான் இதனை பார்த்துக் கொள்ள வேண்டும். செயலர் அதை செய்ய வேண்டும். இதை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் என காரணத்தை அதிகாரிகள் கூறக்கூடாது. மற்றவர்கள் மீது பழியை போட்டு காலத்தை கழித்து விடுகிறீர்கள். செயலர் சொல்றாங்க, திட்டுறாங்க என சொல்லக்கூடாது. கோப்புகள் செயலரிடம் செல்லும்போது துணைத்தலைவர்கள், இயக்குனர்கள், அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு செயலர்கள் அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி

புதுவை மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என்பது எண்ணம், ரூபாய் 500 கோடியில் கடல் நீரை சுத்தப்படுத்தி குடிநீராகும் திட்டத்தை பழைய துறைமுகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இது சம்பந்தமாக அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். ஆனால் துறைசெயலர் இதனை பொருட்படுத்தவில்லை. இதனை கொண்டு வந்தால் நல்லா இருக்கும் முதல்வர் என்ற முறையில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். தற்போது கழிவு நீரை சுத்திகரித்து இரண்டாம் நிலை நுண் வடிகட்டி தண்ணீரை பாரதி பூங்காவிற்கு பாய்ச்சுகிறோம். பாரதி பூங்காவில் தண்ணீர் இல்லையா தண்ணீர் இருக்கு அதனை சரியாக பயன்படுத்துவது கிடையாது. தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தாலும் நன்றாக இருக்கும். சாலையின் மையத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் காய்ந்து உள்ளது. அதிகாரிகள் யாரும் வேலை செய்வது கிடையாது. பாரதி பூங்கா சட்டமன்றம் கவர்னர் மாளிகை எதிரே உள்ளது. அவை எப்படி உள்ளது என்று பாருங்கள். நகராட்சி ஆணையர் பொறியாளர்கள், அதிகாரிகள் என்ன செய்கின்றனர். செலவு செய்யவும், பொருட்களை வாங்கவும் தயாராக உள்ளோம். ஆனால் அதிகாரிகளின் செயல்பாடுகள் இல்லை. அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும்.

அந்த குறைகளை போக்க வேண்டும். தூய்மை பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என அதிகாரிகள் கண்காணிப்பது கிடையாது. நாம் சரியாக இருந்தால் தானே அவர்களை வேலை வாங்க முடியும். கோடிக்கணக்கான பணம் கொடுக்கிறோம். அதனை கண்காணிப்பது நமது வேலை. அதை நாம் செய்வதில்லை. ஒரு சாலையை வெட்டினால் அதனை மூடாமல் 10 நாட்கள் அப்படியே கிடைக்கிறது. குப்பை அல்ல நிறைய செலவு செய்கிறோம். குப்பைத்தொட்டி சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் அதனை செய்வதில்லை. எத்தனை கோடி செலவு செய்தாலும், ஒப்பந்தம் போட்டாலும் அவை மக்களிடம் சேர்வதும் பலனடைவதும் அதிகாரியிடம் தான் உள்ளது. நாம் மற்றவர்கள் மீது பழி போட்டே பழக்கப்பட்டு விட்டோம்.

முதல்வர் ரங்கசாமி

இது உங்கள் புதுச்சேரி, நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தான் வேலை செய்ய வேண்டும். நிறைய குறைபாடுகள் உள்ளது. ரூபாய் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தோம். அவை முழுமையாக செயல்படவில்லை. எத்தனையோ குறைபாடுகள் உள்ளது. காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். தேவையான பணியாளர்கள் கிடைக்கின்றனர். இனிமேல் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் கனமழை பெய்தது. இதுபோன்ற புதுவையில் மழை பெய்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். புதுவையில் உப்பு நீர் உட்புகுந்துவிட்டது. கிராமப்புற பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டோம். அவை பாதியில் நின்று விட்டது. கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ரூபாய் 500 கோடி கேட்டுள்ளோம். விரைவில் நகரப்பகுதியில் நல்ல குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும், என்றார்.

Share This Article
Leave a review