- அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், நவம்பர் மாதத்தில் கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் சவரனுக்கு 680 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து 7,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று (நவம்பர் 1) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (நவம்பர் 2) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,370க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரண தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,600க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூபாய் 6,075க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 106 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை காலத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,455 என விற்பனையானது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 59,640 என விற்பனையானது. தீபாவளி முடிந்த பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது.