ஆந்திராவில் தோல்வி பயத்தால் வாக்காளர்களை கவர குவாட்டர் பாட்டில்கள், சிகரெட் அடங்கிய பரிசு பாக்ஸ்களை வினியோகம் செய்வதாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வழங்குவதாக வலைத்தளத்தில் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆந்திராவில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது அரசியல் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வாக்காளர்களை கவர பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி பயத்தின் காரணமாக அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு பொதுமக்களை கூட்டம் சேர்க்க குவாட்டர் பாட்டில், சிகரெட், ஸ்வீட் பாக்சுடன் பணம் கொடுத்து கூட்டத்தை சேர்த்து வருகின்றனர்.
ஆனால் ஜெகன் மோகன் தனித்து நின்று செய்த நலத்திட்டங்களை கூறி மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார். இதனால் கட்சியையும், ஆட்சியையும் தனியாளாக நடத்தும் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகனை இவ்வாறு தான் எதிர்கொள்வீர்களா? உங்கள் வேலை முடிந்தது.

உங்கள் நாற்காலிகளை மடித்து கொண்டு வீட்டிற்கு செல்லுங்கள், தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி தோல்வி தவிர்க்க முடியாதது என பதிவு செய்துள்ளனர். இதேபோன்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
அப்போது ஆளும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மார்கபுரம் பொறுப்பாளர் அண்ணா ராம்பாபு தனது பெயரில் ஸ்வீட் பாக்ஸ் மற்றும் அடியில் பணத்துடன் கூடிய சுவருடன் தன்னார்வலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கிறார்.

இதுபோன்ற செயல்களை செய்தாலும் மக்களை மாற்ற முடியாது என அரசியல் வாதிகள் செய்கின்றனர். இந்த முறை மக்கள் உங்களை தோற்கடித்து ஆந்திராவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் முடிவு செய்துள்ளனர் என பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இதேபோன்று இந்த இரண்டு கட்சியின் சின்னத்துடன் கூடிய ஆணுறை பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.