பிரபல யூடியூபர்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரபல யூடியூபராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்தார். கடந்த 2008ல் டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் சஸ்பெண்ட் ஆனார்.அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்!
இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார்.
பெண் காவலர் பற்றி அவதூரு பேச்சு!
யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு! இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர்.
சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு!
இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.