சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம், அடுத்த கம்பம் பகுதியில் அமைந்துள்ள ஆர்.ஆர் பள்ளியில் பயிலும் ஹேமந்த் சச்சின் மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அப்போது கடந்த மாதம் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். மேலும் பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடைபெற்ற நிலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் இந்த போட்டியில் பங்கு பெற்றனர்.
பின்பு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கங்களை குவித்தது. இந்த நிலையில், கேலோ விளையாட்டு ஜூடோவில் தமிழகம் சார்பாக கலந்து கொண்ட கம்பம் ஆர்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ஹேமந்த் சச்சின் முன்றாம் இடம்பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

அப்போது சாதனை படைத்து தேனி மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பள்ளியின் தலைவர் ராஜாங்கம் மானவருக்கு திருவள்ளுவர் சிலை வழங்கி வாழ்த்திப் பாராட்டினார். மேலும் பயிற்சியாளர் பாலா, முரளி, பரத் ஆகியேர்களையும் பாராட்டினார்.
தொடர்ந்து பள்ளி துணைத் தலைவர் அசோக்குமார், செயல்தலைவர் ஜெகதீஸ், இயக்குநர் விமலக்கண்ணன், பள்ளி இயக்குநர் கிருத்திகா, பள்ளி முதல்வர் ஆனந்தவள்ளி, மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டினர்.