முழு விவரம் : கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்கு எப்போது…?

2 Min Read
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். இன்று அதிகாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். மதுரை மாகாளிபட்டியில் தனது அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்ட அவர், சினிமா வாய்ப்பு தேடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். தமிழ்நாடு முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், இன்று காலை 6.10 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது. இதனையடுத்து அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த்

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரு, எவ வேலு உள்ளிட்டோர் அவருடன் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கலைஞர் கருணாநிதி மீது ஆழமான அன்பை கொண்டிருந்த விஜயகாந்த் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த துயரில் இருந்து தன்னை தானே தேற்றிக் கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் உருக்கமாக கூறினார். மேலும், விஜயகாந்த் உடல் அடக்கத்துக்கு தமிழ்நாடு அரசின் முழு மரியாதை கொடுக்கப்படும் என்று அறிவித்தார். பின்னர், விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து கண்ணீர்மல்க கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

விஜயகாந்த்

திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்ச்சியாக வந்து மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். நாளை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் விஜயகாந்தின் தேமுதிக அலுவலகத்திலேயே அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது.

 

Share This Article
Leave a review