பிரதமரின் ‘குப்பையிலிருந்து செல்வம்’ என்ற நோக்கம் நிறைவேற்றம் – மத்திய அமைச்சர்

1 Min Read
ஃபக்கன் சிங் குலாஸ்தே

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ‘ஒரு வாரம் ஒரு ஆய்வகம்’ திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மத்திய மத்திய எஃகுத் துறை இணையமைச்சர் எஸ். ஃபக்கன் சிங் குலாஸ்தே, சிஎஸ்ஐஆர் உருவாக்கிய எஃகு கழிவுகளை சாலையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பிரதமரின் ‘குப்பையிலிருந்து செல்வம்’ நோக்கத்தை நிறைவேற்றுவதாகக கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

இந்தியா உலகிலேயே இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடு என்றும், நம் நாட்டில் 19 மில்லியன் டன் எஃகு கழிவுகள் திடக்கழிவுகளாக உருவாகிறது என்றும், இது 2030-ம் ஆண்டுக்குள் 60 மில்லியன் டன்னாக உயரும் என்றும் மத்திய இணையமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே தெரிவித்தார்.

மோடி

எஃகு கழிவுகளை அகற்ற போதிய வழிகள் இல்லாத்தால், நீர், காற்று மற்றும் நில மாசுபாட்டிற்கு வழி வகுக்கிறது. குஜராத்தின் சூரத்தில் எஃகு கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சாலையில் சுமார் ஒரு லட்சம் டன் எஃகு கசடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜேஸ்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலை-66 (மும்பை-கோவா) கட்டுமானத்தில் இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு மத்திய எஃகு அமைச்சகமும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாக மத்திய இணையமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே எடுத்துரைத்தார்.

Share This Article
Leave a review