உத்ராகண்ட் மாநிலம் சமோலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர், மாநில அரசின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து நிவாரணங்களையும் அளித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,“மிகவும் வருத்தம் அளிக்கிறது. உத்ராகண்ட் மாநிலம் சாமோலியில் நிகழ்ந்த விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும், மின்சாரம் தாக்கிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு மனோபலம் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்