பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் (பாஸ்டில் தினம்) நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தின் போது இந்திய முப்படையினர் அணிவகுத்துச் சென்றனர். இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்களும், பிரான்ஸ் நாட்டின் ஜெட் விமானங்களுடன் இணைந்து சாகசம் செய்தன. தேசிய தின கொண்டாட்டத்தில் சாரேஜஹான்சே அச்சா என்ற பாடலுக்கு அணிவகுத்து 269 பேர் கொண்ட இந்தியா முப்படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர், இந்த நிகழ்ச்சியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி ரசித்தார்.
இது பற்றி பிரதமர் மோடி தனது டுவீட்டில் இந்தியா அதன் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்டு நமது கிரகத்தின் அமைதியான வளமான நிலையானதாக மாற்றத் தேவையான அனைத்தையும் செய்ய உறுதிப்பூண்டு உள்ளது. 140 கோடி இந்தியர்கள் எப்போதும் வலுவான மற்றும் நம்பகமான பங்காளியாக இருப்பதற்காக பிரான்சுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். பிணைப்பு இன்னும் ஆழமாக இருக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மெக்கிரான் தனது டுவீட்டில், உலக வரலாற்றில் ஒரு மாபெரும் பங்குதாரர், ஒரு நண்பர். ஜூலை 14 அணிவகுப்பில் எங்கள் கௌரவ விருந்தினராக இந்தியாவை வரவேற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். முதல் உலகப்போரில் பிரெஞ்சுக்காரர்களுடன் இணைந்து சண்டையிட்ட இந்தியர்களை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் பிரதமர் மோடி எலிசபெத் அரண்மனைக்கு சென்றார் அங்கு பிரதமர் மோடியை அதிபர் இமானுவேல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிக்கர்னுடன் உடன் இருந்தார். இதை அடுத்து அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் விருந்தளித்து கௌரவித்தார். பிறகு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரான் கிராண்ட் கிராஸ் ஆப் தி லிஜியன் ஆப் ஆன் ஹேர் என்ற விருதை வழங்கினார்.
இது ராணுவ அல்லது சிவிலியன் கட்டளையங்களில் வழங்கப்படும் பிரான்ஸ் அரசின் மிக உயரிய விருதாகும். விருதை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் பாரீஸில் உள்ள லாஸிங் மியூசிக் கேளில் இந்திய சமூகத்தினரிடும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது இந்திய பிரான்ஸ் கூட்டம் வலுவான அடித்தளம் இருநாட்டு மக்களின் இணைப்பாகும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சின் பெருமையாக காக்கும் இந்திய வீரர்கள் தங்கள் கடமையை செய்யும்போது பிரான்ஸ் மண்ணில் வீர மரணம் அடைந்தனர். இங்கு போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறது.
ஜனநாயகத்தின் தாயான இந்தியா பன்முகத்தன்மையின் முன்மாதிரியாக உள்ளது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன உலகின் பழமையான மொழி தமிழ் உலகின் பழமையான மொழி இந்திய மொழியாக இருக்கிறது என்பதை காட்டிலும் பெரிய பெருமை என்ன இருக்க முடியும். 100க்கும் மேற்பட்ட மொழிகளில் 32,000 மேற்பட்ட செய்தித்தாள்கள் 900 செய்தி சேனல்கள் நாட்டில் உள்ளது. ஒன்றாக நடக்க வேண்டும் ,ஒன்றாக பேச வேண்டும், மனமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. உலகம் முழுவதும் ஒன்று பட வேண்டும் என்று இந்தியா கூறி வருகிறது.
பிரான்சில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் தங்குவதற்கான விசா வழங்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் முதல் 10 நாடுகளில் ஐந்து பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 5 ட்ரில்லியன் பொருளாதார நாடாக இந்தியா மாறுவதற்கு அதிக காலம் தேவைப்படாது. இன்று இதனை உலகம் நம்ப ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் வறுமை ஒழிப்பு தீவிரமாக முடிவுக்கு வந்துள்ளதாக ஐ எம் எஃப் ஆய்வு கூறுகிறது.இவ்வாறு பெரிய வேலையை இந்தியா செய்யும்போது அது இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் நன்மை பயக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.