- திருவள்ளூர் மாவட்டம் ,மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 86 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம்,மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 86 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு பள்ளி மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது சிறு கதைகள் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வாறு மாணவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்பது குறித்தும் கல்வியில் முன்னேறுவதற்கு ஆசிரியர்களின் வழிநடத்தலில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் ஒன்றிய கவுன்சிலர் நந்தினி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அத்திப்பட்டு புருஷோத்தமன் உள்ளிட்டோரியில் கலந்து கொண்டனர்.