திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றுபோது சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது பேருந்து அதிவேமாக மோதி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய மூவரும் பேருந்தின் கீழே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 44 பேரில் பேருந்து நடத்துனர் விஜயசாரதி உள்ளிட்ட உள்ளிட்ட 26 பேர் படுகாயம் அடைந்தனர். சப்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் 108 வாகனத்தின் மூலம் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அரசு பேருந்து நடத்துநர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இக்கோர விபத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மற்றும் அரசு பேருந்து நடத்துநர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.மேலும் படுகாயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.
விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து குருடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுச்சாலை வழியாக பேருந்துகள் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.