வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய சாலை மறியல் போராட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் தலைமையேற்று களப்பணியாற்றியவர் பால சண்முகம் இன்று காலமானார்.
தொடக்க காலத்தில் திருவெண்ணைநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும், அதிமுக தலைமை கழக பேச்சாளராகவும் பணியாற்றியவர். பின்னர் டாக்டர் இராமதாஸ் அவர்களோடு இணைந்து வன்னியர் சங்கத்தை விழுப்புரம் பகுதியில் உருவாக்கியவர்.

டாக்டர் இராமதாஸ் அறிவித்த வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு போராட்டம். அப்போது இரயில் மறியல் போராட்டமாகவும் ஒரு வார சாலை மறியல் போராட்டங்களை திட்டமிட்டு நடத்தி தமிழகத்தின் கவனத்தை இட ஒதுக்கீடு போராட்டம் பக்கம் திருப்பியவர் விழுப்புரம் பகுதியில் இரயில்கள் ஓடாது நின்றன.
அதேபோல் ஒருவார சாலை மறியலில் விழுப்புரம் பகுதியில் போராட்டம் முழு வெற்றியடைய வன்னியர்களின் உணர்வாக வெளிப்படுத்தியவர் பாலசண்முகம்.

அவர்களுடன் தங்கஜோதி, சந்திரசேகரன், டிங்கர் முனுசாமி, வீரபத்திர கவுண்டர், குருபரன், வாசுதேவன், அரிகரன், அன்பழகன், ஞானப்பிரகாசம், பெருமாள் திருமுருகன் போன்ற முன்னணியினர் எம். ஜி. ஆர். ஆட்சியில் விழுப்புரம் பகுதியில் முன்னணியாளராக இருந்து செயல்பட்டார்கள் வன்னியர் சங்கத்தில்.
பாட்டாளி மக்கள் கட்சி உருவான போது விழுப்புரம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் பாமக வேட்பாளராக பாலசண்முகம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு ஒரு மகனும் மூன்று மகளும் உள்ளனர். மேலும் நேற்று பிற்பகல் அவர் காலமானார். அவரது உடல் விழுப்புரம் மகராஜபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது மகன் கனடாவில் பணியாற்றி வருவதால் அவர் வருகைக்கு பின் மாலை அடக்கம் செய்யப்படுகின்றது. இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.