பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக துணை சபாநாயகராக கிறிஸ்தவ தலைவர் தேர்வு..!

1 Min Read
துணை சபாநாயகராக கிறிஸ்தவ தலைவர் தேர்வு

பிரித்தானிய இந்தியாவின் பிரிவினை (1947) முதல் இன்று வரையிலான பாகிஸ்தானின் வரலாற்றை இந்தப் பகுதி முன்வைக்கிறது.பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக சிந்து மாகாண சட்டப்பேரவை தேர்தலில் துணை சபாநாயகராக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அந்தோணி நவீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக துணை சபாநாயகராக கிறிஸ்தவ தலைவர் தேர்வு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. அந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 157 உறுப்பினர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 114 உறுப்பினர்களும் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்

எம்க்யூஎம்-பி கட்சி 36 உறுப்பினர்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. அப்போது உறுப்பினர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடந்தது. அதில் பிபிபி கட்சியின் மூத்த தலைவர் சையத் ஓவைஸ் ஷா 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

துணை சபாநாயகராக கிறிஸ்தவ தலைவர் தேர்வு

அப்போது துணை சபாநாயகராக பிபிபி கட்சியின் கிறிஸ்தவ தலைவரான அந்தோணி நவீத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் முஸ்லீம் மதத்தை அல்லாத ஒருவர் துணை சபாநாயகர் ஆவது இதுவே முதல் முறை.

துணை சபாநாயகராக கிறிஸ்தவ தலைவர் தேர்வு

அப்போது வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நவீத் உருது மொழியில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதை தொடர்ந்து முதல்வர் பதவிக்கான தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு நடக்க உள்ளது. இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review