தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகர் ரஜினி எப்போதும் பேசுபொருளாகி வருபவர்.
நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இன்நிலையில் ரஜினி நடிக்கும் லால் சலாம் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றார்.

தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னாள் ஹீரோயின் ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வந்தது. தற்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.