தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து,

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த மூன்று நாட்களாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி
தற்போது குற்றால சீசன் காலம் என்பதால் மழையோடு இதமான சூழல் நிலவுகிறது. மேலும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.