10 அணிகள் கொண்ட ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வீரர்களை ஏலத்தில் எடுத்ததில் இருந்தே பிரச்னை ஆரம்பித்து விட்டதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் அணி இரண்டிலும் தோல்வியடைந்து பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் அணியின் மோசமான தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது – தங்கள் அணியில் வெறும் வலது கை மட்டையாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பதை வீரர்களை ஏலத்தில் எடுத்தவர்கள் உணரவில்லை.

சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் இடது கை பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரனை விடுவித்து அவரை விட 30 சதவீதம் அதிக விலைக்கு வலது கை ஆட்டக்காரரான ஹேரி ப்ரூக்கை அணியில் எடுத்தனர். இடது கை வீரர் அபிஷேக் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டார். வெறும் வலது கை பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்துக் கொண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சன்ரைசர்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தானிடம் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நேற்று தனது 2 ஆவது போட்டியில் லக்னோவை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியடைந்த நிலையில் அதனுடைய நெட் ரன்ரேட் -2.867 ஆக உள்ளது. 10 அணிகள் கொண்ட ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிடித்துள்ளது.