மானாமதுரை அருகே ஏனாதி கோட்டையைச் சேர்ந்த சதுரகிரி வயது 45 மூங்கில் ஊருணியில் குடும்பத்துடன் வசித்து வந்தான். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். சதுரகிரிக்கும் மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ராதிகா மகன் உரைச்சாமி ராதிகாவின் தோழி அங்காள பரமேஸ்வரி மற்றும் 6 பேர் சதுரகிரி கொலை செய்ய திட்டம் தீட்டினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரை அடித்து கொலை செய்து கிழங்காட்டோர் கண்மாயில் புதைத்தனர்.

ஒரு வாரத்துக்கு பின் உடலை தோண்டி எடுத்து எரித்தனர். சதுரகிரியை காணவில்லை என மே மாதம் அவரது தந்தை மலைச்சாமி போலீசில் புகார் கொடுத்தார். சதுரகிரியின் மகன் துரை சிங்கம் சில நாட்களுக்கு முன் மூங்கில் ஊரினியில் சண்முகசுந்தரம் என்பவரை வெட்டிய வழக்கில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் இசை பூபதி ராஜா மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தந்தை சதுரகிரி மாயமானது குறித்து போலீசார் விசாரணை செய்த போது தாய் உட்பட ஒன்பது பேர் சேர்ந்து அவரை கொலை செய்து தொலைத்து எரித்ததை ஒப்புக்கொண்டான். சதுரகிரியை புதைத்து எரித்த இடத்தில் கிடந்த எலும்புகளை சேகரித்து இறந்தது.

சதுரகிரி என போலீசார் உறுதி செய்தனர் ராதிகா துரைசிங்கம் அங்காள பரமேஸ்வரி வளநாடு கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் சந்தோஷ் வயது 27 கிழங்காற்றுறை சேர்ந்த சோமு மகன் ராசையா வயது 27 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாத்தியா