சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வு..!

2 Min Read

கோவை மாவட்டத்தில் பி.ஆர்.எஸ் மைதானத்தில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வு இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது. இதில் தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வு

அதிகாலை முதலே தேர்வாளர்கள் நீண்ட வரிசையில் கத்திருந்தனர். காலை 6 மணியளவில் அவர்களை தீவிரசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர். இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. 1முதல் நாளான இன்று உயரம், மர்பளவு, 1500 ஓட்டமும் நடந்தது. இந்த உடற்தகுதி தேர்வை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்னண் ஆகியோர் ஆய்வு செய்தனரஇதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு நாளை கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் சரக டி.ஐ.ஜி.,எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

மேலும் கோவை மாவட்டத்தில் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோவையில் 427 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வு.

இன்று காலை கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து, இதில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதனை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்த உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது.

Share This Article
Leave a review