விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்..!

2 Min Read
விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்

தமிழகத்தில் சமீபகாலமாக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து பெரும் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதை அறிவோம்.அதற்கு பாதுகாப்பு விதி முறைகளை மீறி செயல்படுவதே காரணம் என அறியப்பட்டுள்ளது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

- Advertisement -
Ad imageAd image

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளில் அருகேயுள்ள பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியா் அமைத்த சிறப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி அருகே பாறைப்பட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பேராபட்டி என்னும் இடத்தில் இயங்கி வருகின்றது.

திறந்த வெளியிலும் மரத்தடியிலும்,காலி இடங்களிலும் பட்டாசு ஆலைகள் பட்டாசு உற்பத்தி

நாக்பூர் லைசன்ஸ் உள்ள இந்த பட்டாசு ஆலையில் அரசு அறிக்கையில் இயங்கி வராமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலைக்கு பட்டாசு தனி தாசில்தார் சாந்தி என்பவர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை செய்து விட்டு சென்றுள்ளார்.

எச்சரிக்கை செய்து மீண்டும் மாலையில் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை மீறி கூடுதலாக 300க்கு மேற்பட்ட பணியாளர்களை வைத்து அருகில் உள்ள திறந்த வெளியில் மரத்தடி மற்றும் காலி மனையில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி அதிகமாக உற்பத்தி நடைபெற்றுள்ளது. மேலும் திறந்த வெளியிலும் மரத்தடியிலும்,காலி இடங்களிலும் பட்டாசு ஆலைகள் பட்டாசு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்

இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேள்விப்பட்டு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனி தாசில்தார் சாந்தி மற்றும் சிவகாசி டி.எஸ்.பி தனஞ்செயன் மற்றும் போலீசார்,பட்டசு ஆலைகளை விசாரணை ஆய்வு சோதனை செய்ய வந்த வருவாய்த்துறையினர் பட்டாசு ஆலையில் உள்ள இடங்களை ஆய்வு சோதனை செய்து 5 குடோன் மற்றும் பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர். பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share This Article
Leave a review