வரலாற்றிலேயே பெண்ணிலிருந்து ஆணாக அங்கரிக்கப்பட்ட பெண் IRS அதிகாரி..!

2 Min Read
ஆணாக மாறிய பெண்

நாட்டிலேயே முதன்முறையாக, பெண் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர் தனது பெயர் மற்றும் பாலினத்தை ஆணாக மாற்றக்கோரிய மனுவை மத்திய அரசு ஏற்று அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் எம்.எஸ்.எம்.அனுசுயா. இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனப் பல்கலைக்கழகத்தில், சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் துறையில் தனது முதுநிலை டிப்ளமோவை கடந்த ஆண்டு (2023) படித்துள்ளார்.

பெண்ணிலிருந்து ஆணாக அங்கரிக்கப்பட்ட பெண் IRS அதிகாரி

இந்த நிலையில் இவர் தற்போது, ஹைதராபாத்தில் உள்ள மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மாநில இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தான் தன் பெயரையும் பாலினத்தையும் மாற்ற கோரி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய வருவாய் துறையிடம் மனு அளித்திருக்கிறார். அதை பரிசீலனை செய்த மத்திய நிதி அமைச்சகம் இவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு,

அதற்கான உத்தரவை நேற்று (ஜூலை 9 ஆம் தேதி) பிறப்பித்துள்ளது. அதில், “ஹைதராபாத்தில் உள்ள செஸ்டாட் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்ட Miss எம்.அனுசுயா, தனது பெயரை Mr எம்.அனுகதிர் சூர்யா என்று மாற்றவும்,

மனு

தனது பாலினத்தை பெண்ணிலிருந்து ஆணாக மாற்றவும் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. அதன்படி இனிமேல், அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் அனுசுயா ‘Mr எம்.அனுகதிர் சூர்யா’ என்று அங்கீகரிக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றிலேயே பெண்ணிலிருந்து ஆணாக அங்கரிக்கப்பட்ட முதல் ஐ.ஆர்.எஸ். அதிகாரி என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அனுகதிர் சூர்யா.

ஆணாக மாறிய பெண்

இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு ஒடிசாவில் வணிக வரி அதிகாரி ஒருவர் தன் பாலினத்தை பெண்ணாகவும், தனது பெயரை ஐஸ்வர்யா ரிதுபர்ணா பிரதான் என்றும் மாற்றிக் கொண்டார். அதை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Share This Article
Leave a review