பேரூர் தாலுக்கா வேட்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் , பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர்.
கே ஜி டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் மூலம் 1400 குடியிருப்புகள் 10.8 சென்ட் வீதம் கட்டப்பட்டிருக்கிறது. இதில் 600 பேர் தற்போது வரை குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு கால்வாயில் விடப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக சுத்திகரிக்காம கழிவு நீரை வாய்க்காலில் விடுதவால், பயிர் நோய் வாய்ப்படுவதோடு, காய்ப்பும் சரியாக இல்லை. மண் மலடாகி, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்தாண்டு அளித்த புகாரின் பேரில், இந்தாண்டுதான் அரசு அதிகாரிகள் அனைவரையும் அழைத்து கூட்டம் போட்டு தண்ணீரை சுத்திகரிக்காமல் விடமாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். மீண்டும் பழனியப்பன் என்பவரது தோட்டத்தில் நேரடியாக கழிவுநீரை விட்டுள்ளனர்.

இதனால் அருகிலுள்ள கிணற்று நீர், நிலத்தடி நீர் மாசடைந்து , விவசாயத்திற்கும், கால்நடைக்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆறுமுறை மனு கொடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. கே ஜி டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் திட்ட அறிக்கையை வாங்கி பார்க்கும்போதுதான், அதில் 40 கழிவுநீரை சுத்திகரித்து, கார்டனுக்கு விட்டு விட்டு, மீதமுள்ள கழிவு நீரை லாரியில் எடுத்துச்செல்வதாக கூறித்தான், இந்த வீடுகள் கட்ட அனுமதி வாங்கி இருக்கிறார்கள். பொய்யான தகவல்களை சொல்லி அனுமதி வாங்கிவிட்டு விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட்டுகள் மீது, தமிழக முதல்வர், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.