நகைச்சுவை நடிகர் மனோபாலா- காலமானார் கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார்.

2 Min Read
மனோபாலா

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில்  ஒருவரான பாரதிராஜாவிற்கு  உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் மனோபாலா இயக்கத்தில் வெளியானது. ஊர்க்காவலன் திரைப்படம் மிக பெரிய வெற்றியைப் பெற்று தந்தது.

- Advertisement -
Ad imageAd image

‘புதிய வார்ப்புகள்’ என்னும் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோதே, அவரது மெலிந்த தோற்றமும் , நகைச்சுவை நிறைந்த உடல்மொழியும் இயக்குநர் பாரதிராஜாவை வெகுவாக ஈர்த்த காரணத்தினால் பாரதிராஜாவின்  முதல் படத்திலேயே சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் மனோபாலா கிடைத்தது.

அதன்பிறகு, கல்லுக்குள் ஈரம், கோபுரங்கள் சாய்வதில்லை, டிக் டிக் டிக் போன்ற  படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்திக் கொண்ட மனோபாலா  , முன்னணி நடிகர்களின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்குமளவிற்கு தன்னை வளர்த்து கொண்டார்.

மனோபாலா சுமார் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் திரை துறையில் வளம் வந்தார்.

சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் மனோபாலாவின் தோற்றம் பார்வையாளர்களுக்கு எளிதில் அவரை அடையாளம் காட்ட பரிச்சயமான நடிகரானார் மனோபாலா. தொடர்ந்து, 1982-ல் ‘ஆகாய கங்கை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். கார்த்திக் நாயகனாக நடித்த அந்தப் படம், பிரபல இயக்குநர் மணிவண்ணன் கதாசிரியராக பணியாற்றினார்.

40 திரைப்படங்களை இயக்கியிருக்கும் மனோபாலாவின் திரை வாழ்க்கையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஊர்க்காவலன்’, ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ போன்ற படங்கள் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழ் மட்டுமின்றி, ’மேரா பதி ஷிர்ப் மேரா ஹை’ எனும் இந்தி படத்தையும், ‘டிசம்பர் 31’ எனும் கன்னட படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இயக்குநர், நடிகராக வலம் வந்த மனோபாலா, 2014-ல் வெளியான சதுரங்க வேட்டை’ படம் மூலம் தயாரிப்பாளரானார். எச். வினோத் இயக்குநராக அறிமுகமான அந்தப் படம் வியாபார  ரீதியாக வெற்றியடைந்ததோடு, நற்பெயரையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை- 2 ஆகிய படங்களையும் அவர் தயாரித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் கலந்துகொண்டிருந்த மனோபாலா, கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார்.

Share This Article
Leave a review