புதுக்கோட்டையில் பிரபல ரவுடி என்கவுண்டர்..!

2 Min Read

திருச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி. இவர் மீது 5 கொலை வழக்கு மற்றும் 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையத்தில் வழக்குகளும் உள்ளன.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் கடந்த 12-12-2022 ஆம் ஆண்டு இளவரசன் என்ற ரவுடியை புதுக்கோட்டை புது குளம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துரைசாமி முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது.

பிரபல ரவுடி

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் காட்டுப்பகுதியில் ஒருவர் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்பட 4 தனிப்படை போலீசார் திருவரங்குளம் காட்டு பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

போலீசார்

அப்போது போலீசாரை பார்த்து துரைசாமி தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை வெட்டி உள்ளார். அதில் மகாலிங்கத்திற்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, தற்போது அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பிரபல ரவுடி துரைசாமி போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது போலீசார் முதல் ரவுண்டு எச்சரிக்கையாக வானத்தை நோக்கி சுட்டனர்.

பிரபல ரவுடி அரிவாளால் வெட்டிய காவல்துறை

அதையும் மீறி அவர் மேலும் போலீசாரை தாக்க முற்பட்டதால் அடுத்த இரண்டு ரவுண்டு துரைசாமி மீது போலீசார் சுட்டதில் பிரபல ரவுடி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதை அடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி துரைசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை

இந்த நிலையில் பிரபல ரவுடி துரைசாமி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டையில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review