பிரபல பேட்டரி திருடன் விழுப்புரம் வாலிபன் கைது..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார் ஆகிய பகுதிகளில், நெடுஞ்சாலையோரம் மற்றும் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளில் இருந்து, பேட்டரிகள் திருடு போவதாக அடுத்தடுத்து புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தது. இது குறித்து, நடவடிக்கை எடுக்கும் படி எஸ்.பி. சசாங்சாய் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில், விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் அருகே கோணங்கி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்நிதி. இவர் தனது வீட்டு வாசல் முன்பு நிறுத்தி வைத்திருந்த லாரியில் பேட்டரியை திருடும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜானகிபுரம் பகுதியில் போலிசார் வாகன சோதனை ஈடுபடும் போது அந்த வழியாக வாகனத்தில் வந்த நபரை பிடித்து, போலிசார் விசாரணை நடத்தினர்.

லாரி பேட்டரிகள்

விசாராணை நடத்தியதில் முன்னுக்கும் பின் முரணாக பதில் கூறவே, அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை வயது 38, என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர் அருள்நிதிக்கு சொந்தமான லாரியில் பேட்டரி திருடியது விசாராணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

விசாரணையில் திருவெண்ணை நல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 3 இடங்களில் வாகனங்களில் பேட்டரி திருடியதும், தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 6 இடங்களில் பேட்டரி திருடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதும், வளவனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 8 இடங்களில் கைவரிசை காட்டி வழக்கு பதிவுகள் செய்யப்பட்டிருப்பதும், விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 இடங்களில் பேட்டரி திருடியதும், போலீசார் இவரை தேடி வந்ததும் விசாராணையில் தெரிய வந்தது.

பிரபல பேட்டரி திருடன் வாலிபன் கைது

மொத்தம் 19 வழக்குகளில் போலீசார் நேற்றிய இவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 18 பேட்டரிகள் மற்றும் ரூபாய் 5 ஆயிரத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.

Share This Article
Leave a review