கஞ்சா போதையில் , பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது 7 பிரிவுகளில் வழக்கு.
FIR சொல்வது என்ன ?
பெண் போலீசார் மற்றும் காவல்துறை IG அருண்குமார் குறித்தும் ரெட் பிக்ஸ் (REDPIX) என்ற தனியார் youtube சேனலில் தரக்குறைவாக பேசிய குற்றத்திற்காக , கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் , சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர் .
இந்நிலையில் கோவை மாநகர போலீசார் சவுக்கு சங்கர் அவருடைய நெருங்கிய நண்பர்களுடன் தேனீ மாவட்டம் பழனிசெட்டிபட்டி to பூதிப்புரம் சாலையிலுள்ள தி ரிவேரா என்ற தனியார் ரெசார்ட்டில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது .
தகவலின் பேரில் கோவையிலிருந்து தேனிக்கு வந்த கோவை மாநகர போலீசார் , தனியார் ரெசார்ட்டில் தனது இரு நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி இருந்த சவுக்கு சங்கரை கைது செய்ய முற்பட்டுள்ளனர் .
எனினும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளான பரமக்குடியை சேர்ந்த ராம்பிரபு மற்றும் சென்னையை சேர்ந்த ராஜரத்தினம் ஆகிய மூவரும் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் .
அவர்களை சமாளிக்க உள்ளூர் போலீசாரின் உதவி தேவைப்படவே , கோவை போலீசார் உடனடியாக தேனீ , பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளரை தொடர்பு கொண்டு கூடுதல் போலீஸ் பந்தபோஸ்த்து கேட்டுள்ளனர் .
பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அளித்த உத்தரவின்பேரில் தி ரிவேரா ரெசார்ட்டுக்கு பழனிசெட்டிபட்டி பெண் உதவி காவல் ஆய்வாளர் பாக்கியம் தலைமையாலான தேனீ மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு இரவு சரியாக 1 : 20 மணிக்கு சென்றுள்ளார் .
அங்கு சவுக்கு சங்கரை கைது செய்ய வந்த கோவை மாநகர போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சவுக்கு சங்கர் மற்றும் அவரை கைது செய்ய விடாமல் இடையூறு செய்து கொண்டிருந்த சங்கரின் கூட்டாளிகளான ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகியோர்களை கட்டுப்படுத்த முற்பட்டுள்ளார் .
அப்போது பெண் உதவி ஆய்வாளர் பாக்கியத்தை சவுக்கு சங்கர் ஒருமையில் பேசியும் , கொலை மிரட்டல் விடுத்தும் தாக்க முற்பட்டுள்ளார் . இதில் நிலை தடுமாறிய உதவி ஆய்வாளர் பாக்கியம் கீழே விழுந்துள்ளார் .
மேலும் அவரது கூட்டாளிகளான ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகியோரும் பெண் உதவி ஆய்வாளர் பாக்கியத்தை பார்த்து நாங்க எல்லாம் சவுக்கு சங்கர் டீம் , அவரை பார்த்த இந்தியாவே அலறும் அவரை கைது செஞ்ச இதுக்கு அப்புறம் யாரும் காக்கி ட்ரெஸ்ஸே போடா முடியாது என்று மிரட்டும் தோரணையில் பேசியுள்ளனர் .

ஒருவழியாக அவரது கூட்டாளிகளை கட்டுக்குள் கொண்டுவந்த பழனிசெட்டிபட்டி போலீசார் , சவுக்கு சங்கரை கோயம்பத்தூர் போலீசாருடன் அனுப்பி வைத்துள்ளனர் .
மேலும் சவுக்கு சங்கர் கூட்டாளிகளை விசாரணை மேற்கொண்டு இருக்கும் பொது , உதவி ஆய்வாளர் பாக்கியத்திற்கு சவுக்கு சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகியோர் கோவை போலீசார் வருவதுற்கு சற்று முன்னர் கூட அவர்களது அறையில் கஞ்சா புகைத்து கொண்டு இருந்ததாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது .
ரகசிய தகவலின் பேரில் , வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த உதவி ஆய்வாளர் பாக்கியம் , அவர்கள் உதவியுடன் அந்த தனியார் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சவுக்கு சங்கரின் கார் மற்றும் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது சுமார் 500 கிராம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் , அதனை புகைபதற்கு தேவையான உபகாரங்கள் மற்றும் சவுக்கு சங்கரின் சொகுசு கார் , பர்ஸ் , உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சவுக்கு சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகியோர் மீது அரசு அதிகாரியை கடமை செய்யவிடாமல் தடுத்து அவர்களை தாக்க முற்பட்டது , பெண்கள் வன்கொடுமைத் தடைச் சட்டம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .