ஆயுதப்படை வளாகத்தில் சரக டி.ஐ.ஜி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் தேர்வு..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டம், ஆயுதப்படை வளாகத்தில் சரக டி.ஐ.ஜி ஆய்வாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் தேர்வு இன்று தொடங்கியது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்களுக்கு இன்று விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சான்று சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு இன்று நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகம்

தமிழ்நாடு காவலர் சீருடை பணியாளர்கள் தேர்வு மையத்தால் கடந்த 26.08.2023 மற்றும் 27.08.2023 ஆகிய இரு தேதிகளில் நடத்தப்பட்ட சார்பு உதவி ஆய்வாளர்கள் எண்ணிக்கை 621+128 என மொத்தம் சார்பு ஆய்வாளர் பணிக்கு 749 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொத்தம் 337 தேர்வாளர்கள் இன்று மற்றும் நாளை விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள சான்று சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி, உடல் திறன் தேர்வுகள் தொடங்கியது.

காவலர்கள் உடல் திறன் தேர்வுகள், தலைவர் தினகரன் மற்றும் விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜி ஆய்வாளர் மற்றும் ஜியாவுல்ஹக் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் தலைமையில் இன்று ஆய்வு நடைபெற்றது. இந்த நிலையில் சார்பு ஆய்வாளர் பணிக்கு தேர்வானவர்களின் சான்றுகள் சரிபார்ப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வானவர்களுக்கு உயரம் மார்பு அளவு எடுத்தல் ஆகிய போன்ற அளவீடுகள் எடுத்து முடிக்கும் பணி இன்று நடைபெற்றது. பின்னர் சார்பு ஆய்வாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடத்தப்பட்டது.

கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் 100 மீட்டர், 400 மீட்டர் தகுதி தேர்வு

இதில் வெற்றி பெறுபவர்கள் நாளை நடைபெற உள்ள கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகிய ஓட்டப்பந்தங்களில் வெற்றி பெற்ற பிறகு தான் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என விழுப்புரம் டி.ஐ.ஜி ஆய்வாளர் மற்றும் ஜியாவுல்ஹக் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் முன்னிலையில் தெறிவித்தனர். இந்த சார்பு ஆய்வாளர் பணி தேர்வுக்காக ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடதக்கது.

Share This Article
Leave a review