மாநிலத்தில் ஒரு அரசும் , மத்தியில் ஒரு அரசும் ஆட்சி புரிந்தால் மக்களுக்கான நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் இடர்பாடுகள் இருக்கும் , எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றியைக் கர்நாடக மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ காணொளி மூலம் கேட்டுக்கொண்டார் .
கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ளது . தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் , பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி கர்நாடக தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள உள்ள அனைத்து வாக்குச் சாவடி நிர்வாகிகளிடமும் காணொலி வாயிலாக உரையாடினார் .
அப்பொழுது அவர் , கர்நாடக மாநில வாக்காளர்கள் பாஜக அரசு அமைய வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர் , எனது கர்நாடக பயணத்தின் போது அவர்கள் கொடுத்த வரவேற்பே இதற்குச் சாட்சி .

மேலும் கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொறுப்பு பூத் நிர்வாகிகள் ஆகிய உங்கள் கையில் தான் உள்ளது .அணைத்து பூத்திலும் பாஜக வெற்றியை உறுதி செய்தால் நிச்சயம் அந்த தொகுதியில் பாஜகவே வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை . எனவே அணைத்து பூத்திலும் பாஜக வெற்றியை உறுதி செய்யுங்கள் . என்று கேட்டுக்கொண்டார் .
பின்பு பேசிய நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தைக் கடுமையாக விமர்சித்தார் , காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடே இந்த தேர்தலில் களமிறங்கியுளார்கள் . அவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை , மேலும் மாநிலத்தில் ஒரு ஆட்சியையும் , மத்தியில் ஒரு ஆட்சியையும் அமைந்தால் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாகச் சேர்வதில் சுணக்கம் ஏற்படும் , அதனால் இரட்டை என்ஜின் தலைமையைக் கர்நாடக வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் .
அந்த பொறுப்பு , நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் நிர்வாகிகளுக்கே முழுமையாக உள்ளது . காங்கிரஸ் கட்சியினர் இலவசத் திட்டங்களையும், இலவசப் பொருட்களையும் காட்டி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றுவிடலாம் என்ற தப்புக் கணக்குப் போடுகிறார்கள் அது ஒருபொழுதும் நடக்காது என்று அவர் பேசினார் .