மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை சோதனை

2 Min Read
ம்ணல் குவாரி

தமிழக கணிமவளங்களில் முக்கியனானது மணல்.இந்த மணலை அள்ள அரசே அனுமதி அளித்து வரும் நிலையில்,அவை முறையாக அள்ளப்படுகிறதா என அரசு கண்காணிப்பதும் இல்லை நடவடிக்கை எடுப்பதுமில்லை.இதனால் பெரும் ஆபத்து இருக்கிறது என்று யாரும் உணருவதில்லை.மண் சுரண்டல் நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக குறைக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

.மணல் அள்ளுவதாக இருந்தாலும் மண் அல்லது இருந்தாலும் வேலை வேண்டும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது குறிப்பாக மூன்று அடிகளுக்கு மேல் மணல் அள்ளக்கூடாது என்றும் அதற்கு மேல் மணல் அள்ளுவது சட்டப்படி குற்றமாகும் தண்டனைக்கு உட்பட்டதாகவும் இன்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது ஆனால் மணல் அள்ளுகிற ஒப்பந்ததாரர்கள் வருவாய்த்துறை என எல்லோருமாக ஒன்று சேர்ந்து மக்கள் போராடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மணல் லாரிகள்

இதனால் ஒட்டு மொத்த தமிழகமும் பாதிப்புக்குள்ளாகிறது.அரசு விதித்த விதிகளை ஒப்பங்ததாரர்கள் மதிப்பதே கிடையாது. தமிழகத்திற்கு மட்டும் இந்த ஒப்பந்ததாரர்கள் மணல் அள்ளுவதில்லை கேரளா,ஆந்திரா, கோவா, கர்நாடகா என பல மாவட்ட, மாநிலங்களுக்கு மணல் அள்ளப்பட்டு கள்ளத்தனமாக அனுப்பபடுகிறது.இவை முழுவதும் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் நடப்பதில்லை.அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கரூர் மாவட்டம் மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு செல்லும் சாலையை அங்கிருந்த ஊழியர்கள் சேதப்படுத்திவிட்டு, ஆவணங்கள், ரசீதுகள் உள்ளிட்டவற்றுடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் அமலாக்கத் துறையினர் சோதனையிடாமல் திரும்பிவிட்டனர்.

மணல் குவாரி

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட்ட நன்னியூர், மல்லம்பாளையத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, குவாரியில் உள்ள மணல் இருப்பு, அனுமதிக்கப்பட்ட இடத்தில் மணல் எடுக்கப்பட்டதா, அனுமதிக்கப்பட்ட அளவு மணலைவிட அதிகமாக எடுக்கப்பட்டதா என்று அளவீடு செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக மணல் குவாரி செயல்பட்டதா எனவும் ஆய்வு நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள ஒருவந்தூரில் காவிரிஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு எடுக்கப்படும் மணல், மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள கிடங்கில் சேகரிக்கப்பட்டு, விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதே போன்று விழுப்புரம்,கடலூர் போன்ற பகுதிகளிலும் குவாரிகளை அளவீடு செய்யவும்.இந்த குவாரிகளிலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.அந்த பகுதி மக்கள்.

நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய இது போன்ற முறையற்ற செயல்களே காரணம்.அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் நிலத்தடி நீர் மட்டத்தை காப்பாற்ற முடியும்.அரசு செய்யுமா?பொருத்திருந்து பார்ப்போம்.

Share This Article
Leave a review