மீண்டும் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் ,இரண்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதி .

2 Min Read

காஞ்சிபுரம் அருகே பிரபல ரவுடி பல்லவர்மேடு பிரபாகரன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தலைநகரான சென்னையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . மேலும் இந்த என்கவுண்டர் சம்பவத்தில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

காஞ்சிபுரம் அருகே உள்ள பல்லவர்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிரபாகரன். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட 20 கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன .

அண்மையில் தேமுதிக நிர்வாகி சரவணன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார் .

இந்நிலையில் அவரை நேற்று ஒரு மர்ம கும்பல் ஓடஓட வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுவந்தனர் .

இந்த நிலையில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு காரை காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காரிலிருந்த நபர்கள் போலீசாரை நோக்கி நாட்டு குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர் . மேலும் அந்த கும்பல் போலீசார் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள போலீசார் வாகனத்தை நோக்கி அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதனை திர்கொள்ள போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காருக்குள் இருந்த இரண்டு ரவுடிகல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது போலீசாரின் என்கவுன்ட்டரில் இறந்தவர்கள் பிரபாகரனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தேமுதிக நிர்வாகி சரவணனின் அண்ணன் ரகு என்பது விசாரணையில் தெரியவந்தது . ரகு மீது கொலை , கொள்ளை ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது .

மேலும் ரகுவுடன் காரில் பயணித்தவர் அவரது கூட்டாளி பாஷாவும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார் .

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாஷாவை மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ரகு , பாஷா ஆகிய ரவுடிகள் இருவரும் தாக்கியதில் படுகாயமடைந்த 2 போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

காஞ்சிபுரம் பகுதியில் அதிகரித்து வரும் என்கவுண்டர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர்.

Share This Article
1 Review