சங்கரன்கோவில் அருகே புளியங்குடி,சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையில் அடிக்கடி இறக்கும் வன உயிரினங்கள், வனத்துறையினரின் பாதுகாப்போடு வேட்டை நடைபெறுகிறதா. இல்லை இயற்கை மரணமா சந்தேகத்தை எழுப்பும் வன ஆர்வலர்களுக்கு எழுந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாகும். மேற்குதொடர்ச்சி மலையினால் பல்லாயிரகணக்கான விவசாய நிலங்கள் பலன் அடைந்து இயற்கையான காற்றை அனைத்து வகையான உயிரனங்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்றை கொடுக்கிறது…
இத்தகையா பெருமை வாய்ந்த மேற்குதொடர்ச்சி மலையில் மான், யானை, கரடி, சிறுத்தை, காட்டு மாடு, முயல், உடும்பு, அழுங்கு, நரி, மயில், பன்றி, உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்களுடன் விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் அதிகளவில் உள்ள இயற்கையான வளமையான சிறப்பு வாய்ந்த மலையாகும்.

இந்த மலை மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறையினர் அமைக்கப்பட்டு அதில் பணிபுரியும் வன ஊழியர்களுக்கு மாதம் இலட்சகணக்கில் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று கொண்டும் புளியங்குடி, சிவகிரி வனத்துறையினர் மலையை அளிக்க காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டை முன் வைக்கின்றனர்..
புளியங்குடி, சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையில் கடந்த ஓராண்டில் மட்டும் மின் வேலியில் சிக்கி ஒரு யானையும், தலையனை பகுதியில் நோய்வாய் பட்டு சிகிச்சை பலனின்றி யானை ஒன்றும் கோட்டைமலையாற்று பகுதியில் ஒரு யானை, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாறையின் நடுவே சிக்கி அழுகிய நிலையில் யானை ஒன்றும் இறந்துள்ளது.கடந்த ஓராண்டில் மட்டும் சிவகிரி, புளியங்குடி வன எல்லைக்குட்பட்ட பகுதியல் மட்டும் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளது. இது போன்று பல்வேறு வன உயிரினங்கள் நாளுக்கு நாள் உயிரிழந்து வருவதாகவும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மேற்குதொடர்ச்சி மலையில் அடிக்கடி தீ பற்றி எரிந்து விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.இதற்கு எல்லாம் காரணம் சிவகிரி, புளியங்குடி பகுதியில் பணிபுரியும் வனத்துறையினர் காட்டுப்பகுதியல் ரோந்துப்பணியில் ஈடுபடாமல் இருப்பதனால் வன விலங்குகள், வனங்கள் அழிந்து வருகின்றது.
மேலும் வனத்துறையினர் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலோடு தொடர்பில் இருந்து கொண்டு வேட்டையை கண்டு கொள்ளாமல் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே புளியங்குடி, சிவகிரி வனத்துறையினர் ஐந்தாண்டுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதானல்தான் இது போன்ற வன குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் எனவே வனகாப்பாளர், வேட்டைதடுப்பு காவலர்கள், ஆகியயோரை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட வன அலுவலர் முருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வன ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.