படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து.!

2 Min Read
முதல்வர் ஸ்டாலின்

நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறினார். தனது அருகே அமர்ந்திருந்த மாணவர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.

- Advertisement -
Ad imageAd image

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை நான் சாப்பிட்டு விட்டேன். திருக்குவளையில் உதித்த சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது. கருணாநிதி படித்த தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம் செய்வதில் பெருமை.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எனக்கு மன நிறைவை அளித்துள்ளது. சத்துணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குழந்தைகளுக்கு பேபி ரொட்டி திட்டத்தை முதன்முதலில் வழங்கியவர் கருணாநிதி. அண்ணா பிறந்தநாளாக செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கினால் எனது மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும். பலரின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். காலை உணவு சாப்பிடாத பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவது கஷ்டம். குழந்தைகளின் வளர்ச்சியில்தான் அரசாங்கத்தின் வளர்ச்சி அடங்கி உள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தி வருகிறோம்.

காலை உணவுத்திட்டத்தால் எதிர்கால தமிழ் சமுதாயம் ஏராளமான பயன்களை பெறும். மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியது தி.மு.க. அரசு. பெரியார், அண்ணா, கருணாநிதி
வளர்த்த சமூக நீதி பாதையில் தி.மு.க. அரசு ஆட்சி நடத்தும். இது துரோணாச்சாரியார்களின் காலம் இல்லை. ஏகலைவன்களின் காலம். படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a review