அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி தலைமுடியை இழுத்துத் தள்ளி நடுரோட்டில் அராஜகத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் கண்டனத்தை தெரிவித்துள்ளார் .
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார் . காளிகுமார் சரக்கு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் நேற்று அவர் சரக்கு வாகனத்தில் திருச்சூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது , இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் காளிகுமார் சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்து , அவரை கீழே இழுத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார் .
இதனிடையில் காளிகுமாரை கொலைசெய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் இன்று அருப்புக்கோட்டையில் , போராட்டம் நடத்த திட்டமிட்டு , அரசு மருத்துவமனை அருகே திரளாக கூடினர் . இதனை அறிந்த அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளார் காயத்ரி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .
போராட்டத்தில் ஈடுபட முயன்ற காளிகுமாரின் உறவினர்களை பெண் டி.எஸ்.பி காயத்ரி தடுக்க முயன்றபோது கூட்டத்தில் இருந்தவர்கள் டிஎஸ்பி-ஐ கடுமையாக தாக்கினர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ” விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 3, 2024
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம். அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் “.என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்