அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!

2 Min Read

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடைபெற்றது. உறுப்பினர் சேர்ப்பில் தோல்வி எம்.பி சீட்டுக்கு வேட்பாளர் கிடைக்காமல் திணறுவது ஒன்றிய அரசின் நெருக்கடி குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், கூட்டம் தொடங்கியதும், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி வரவேற்றார். எடப்பாடி பழனிசாமி சிறப்பு உரையாற்றினார். கூட்டம் சுமார் 50 நிமிடம் மட்டுமே நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே உறுப்பினர் சேர்க்கை குறித்து பலமுறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி கூறியும் அதிமுக கட்சியில் உறுப்பினராக சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை.

எடப்பாடி பழனிசாமி

இதனால் மாவட்ட செயலாளர்கள் சோர்ந்து போய் உள்ளனர். இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது மேலும் எம்.பி தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 தொகுதிகளுக்கும் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்காக மாவட்ட செயலாளர்களிடம் பணம் உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து தரும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். இதுவரை 5 தொகுதிகளுக்கு மட்டுமே ஆட்கள் தயாராகியுள்ளனர். 35 தொகுதிகளுக்கு ஆட்களே கிடைக்கவில்லை. குறிப்பாக சென்னைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் உள்ளார். அதே நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனாலும் கட்சியின் முன்னணியினரின் நடவடிக்கையில் தெளிவாக முடிவு இல்லாததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் உள்பட பொறுப்பாளர்கள் யாரையும் பேச அனுமதிக்கவில்லை. இதனால் மாவட்ட செயலாளர்கள் மீதுள்ள குறைகளை எங்களால் கட்சி தலைமையிடம் எடுத்துக் கூற முடியவில்லை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதனால் டிசம்பர் மாதம் 4ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார். ஜனவரி மாதம் முதல் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி இல்லை. ஆனாலும் சில கட்சியினர் அதிமுக தொண்டர்களை குழப்பி வருகிறார்கள். இது பற்றி அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களிடம் நிர்வாகிகள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

Share This Article
Leave a review