கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி – எஸ்.பி வேலுமணி..!

1 Min Read

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

அதிமுக தலைமை நிலைய செயலாளர், எஸ்.பி வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;- தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுவதாகவும்,

அதிமுக

கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளதாக கூறினார்.

அதிமுக தொடங்கிய பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல், திமுக அரசு முடக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் கொங்கு பகுதியில் செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி, குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். திமுக ஐடி குழுவினர் தவறான செய்திகளை பரப்புவதாகவும், அதனை ஊடகங்களும் செய்திகளாக பதிவிடுவதாக அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் பல்வேறு உக்கட்சி பூசல்கள் இருப்பதாக பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகள் வெளியிடுவதை கண்டித்த அவர், கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி என்றார்.

கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி – எஸ்.பி வேலுமணி

கட்சிக்குள் எந்த பிரச்சனை வந்தாலும், அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின்பு, எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவும் எடுப்பார் என்றார்.

கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டிய எஸ்.பி வேலுமணி, 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பொறுப்பு ஏற்ற, உடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும்

Share This Article
Leave a review