இந்த செயற்குழு கூட்டத் தேதியை பாஜக முடிவு செய்ததா இல்லை பாஜக விற்க்காக இவர்கள் முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருகிறார்களா? என்ற குழப்பம்அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு.
சென்னையில் ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
திடீரென பல்வேறு காரணங்களால் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே…

பின்னர் அதே ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில காரணங்களால் நடைபெற இருந்த அதிமுக செயற்குழுக் கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது அதிமுகவில் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இன்று திடீரென,
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மற்றும் அதிமுக உறுப்பினர் சேர்ப்பு ஆகியவை தொடர்பாக இந்த செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 3 இடங்களில் போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி கூட்டப்பட உள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,
”கர்நாடகா சட்டசபை பொதுத்தேர்தல் குறித்தும் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும்
அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில்
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என்றும்
செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள், தலைமை செயற்குழு உறூப்பினர்கள் (மகளிர்) அனைவரும்
உரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த செயற்குழு கூட்டத் தேதியை பாஜக முடிவு செய்ததா இல்லை பாஜக விற்க்காக இவர்கள் முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருகிறார்களா? என்ற குழப்பம்
அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,
இதற்க்கு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அவர் தர்ப்பிலிருந்து என்ன குட்டிக் கலாட்டா செய்யப் போகிறார் என்று எடப்பாடி அவர்கள் பதறிப் போயிருக்கிறாராம்.