உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் 50 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் , இலங்கை அரசாங்கம் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது .
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இரண்டாவது முறையாக உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
இலங்கை வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நாடக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் மக்கள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். பணவீக்கம், வேலையிழப்பு, அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு போன்ற பல பிரச்சனைகளில் சிக்கி கொண்டு இருந்தது. இலங்கைக்கு பல நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான போதிய நிதியை அரசு ஒதுக்காததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இயக்குனர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்கா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் 50 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் , இலங்கை அரசாங்கம் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது . தேர்தலுக்கான போதிய நிதி வழங்குவதை அரசு உறுதி செய்த பின்னரே தேர்தலை நடத்துவதற்கான அடுத்த தேதி அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.