பாகிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் – மக்கள் பீதி..!

2 Min Read

பாகிஸ்தானில் நள்ளிரவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர்.

- Advertisement -
Ad imageAd image
பாகிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம்

சமீப காலமாக நம் அண்டை நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத்தின் வடகிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு சுமார் 26 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம்

உள்ளூர் நேரப்படி இன்று நள்ளிரவில் சுமார் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது இஸ்லாமாபாத்தின் சில பகுதிகள் குலுங்கியதாக கூறப்படுகிறது. வீடுகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அதிர்வுக்குள்ளாகின.

அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என தெரிய வருகிறது. பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது.

பாகிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் – மக்கள் பீதி

கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 73 ஆயிரம் பேர் பலியாகினர். சுமார் 35 லட்சம் மக்கள் வீடு, வாசலை இழந்து தவித்தனர். இதேபோல், கடந்த 2013ம் ஆண்டு நிலநடுக்கத்துக்கு சுமார் 370 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் – மக்கள் பீதி

நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனினும் நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Share This Article
Leave a review