- அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே — குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை.
இது “குளிர்காலப் பருவப்பெயர்ச்சி” எனவும் அழைக்கப்படுகிறது. புவியின் வட அரைக்கோளக் குளிர்காலப் பருவத்தில் கதிரவனின் கதிர்கள் தென் அரைக்கோளத்தின் மேல் வீழ்கின்றன. தென் அரைக்கோளப் பகுதியில் வளி சூடாகி மேலெழும்புகிறது; அப்பகுதியில் தாழ்வழுத்தம் ஏற்படுகிறது. அதை நிரப்ப வட அரைக்கோள வளி “குளிர் கிளம்பல்”நிகழ்த்துகிறது. இக் குளிர் கிளம்பிய காற்று பெயரும் பகுதிகளிலுள்ள ஈரப்பதத்தையெல்லாம் சேகரித்துக் கொண்டு இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி, இலங்கை, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் மழையாகப் பொழிகின்றது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே — குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 – 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில நெடுஞ்சாலை துறையினர் தஞ்சை உட்கோட்ட அலுவலகத்தில் பத்தாயிரம் மணல் மூட்டைகள், சவுக்கு கழிகள் மரம் அறுக்கும் எந்திரம் உள்பட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க இருக்கிறது.
மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய தஞ்சை நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது.
கொஞ்சம் இதையும் படிங்க :https://thenewscollect.com/a-crocodile-walking-in-the-water-of-kollidam-river-near-papanasam/
இதன் ஒரு பகுதியாக சாலை அரிப்பை சரி செய்யவும்! சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டால் அவற்றை சரி செய்யவும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் தஞ்சை உட்கோட்ட அலுவலகத்தில் பத்தாயிரம் மணல் மூட்டைகள், சவுக்கு கழிகள், பொக்லைன் எந்திரம், மரங்களை அப்புறப்படுத்தும் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரம், அரிவாள் கடப்பாரை, மண்வெட்டி, போன்ற அனைத்தும் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பணியாளர்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்கின்றனர்.