- மதுவிலக்கு மாநாட்டிற்கு அரை கூவல் எடுத்திருக்கிறோம் கட்சி முன்னணி தலைவருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மது கடைகளை மூட முடியும்.
தஞ்சையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி.
தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் மதுவிலக்கு மாநாட்டிற்காக அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது கட்சியின் முன்னணி தலைவருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். மதுக்கடைகளுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து குரல் எழுப்புவார்கள் யாருக்கும் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை மதுபான கடைகள் இருக்கட்டும் என சொல்ல எந்த அரசியல் கட்சிக்கும் சொல்ல வாய்ப்பு இல்லை மதுபானத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது . அனைவரும் ஒருமித்த கருத்தில் இருக்கும் போது ஏன் சேர்ந்து குரல் கொடுத்த கூடாது அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மது கடைகளை மூட முடியும்.
நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அனைவருக்கும் அழைப்பு விடுப்போம் பங்கேற்பதும் பங்கேற்காமல் போவதும் அவரவர் விருப்பம். பாமகவை இழிவு படுத்துவது எங்களது நோக்கம் அல்ல மது விளக்கு மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வரத்தான் செய்யும் கலங்கையில் விளைவிக்க வேண்டும் என பலர் நினைக்கிறார்கள் அதை நாங்கள் பொறுப்பெடுத்தவில்லை என தெரிவித்தார்.