ப்ளான் அப்ரூவல் தொடங்கி அனைத்திலும் லஞ்சம் , பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் , பட்டுக்கோட்டையில் பரபரப்பு .!

2 Min Read
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன்

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் விடிய விடிய நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புதுறை சோதனையில் ரூபாய் 6 .60 லட்சம் பறிமுதல் . நகராட்சி ஆணையர், உதவி பொறியாளர் உள்ளிட்ட 4 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை .

- Advertisement -
Ad imageAd image

கும்பகோணம் மாவட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை நகராட்சியில் ப்ளான் அப்ரூவல் உள்ளிட்ட அணைத்து வேலைகளுக்கும் அங்கு இருக்கும் அதிகாரிகள் கைவுட்டு பெறுவதாகவும் , லஞ்சமாக பெற்ற பணத்தை உயர் மட்ட பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்திலேயே வைத்து பிரித்து கொள்வதாகவும் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம்

இந்த நிலையில் நேற்று மாலை பட்டுக்கோட்டை நகராட்சி தி.மு.க நகர்மன்றத் தலைவி சண்முகப்பிரியா தலைமையில் மாதாந்திர அவசர கூட்டம் நடைபெற்றது . கூட்டம் முடிந்து நகர மன்ற தலைவர் சண்முகப்ரியா மற்றும் அணைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கூட்டம் முடிந்து சென்ற பிறகு .

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி உதவி பொறியாளர் மனோகரன் தலைமையில் ரகசிய கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது . இந்த கூட்டத்தில் லஞ்ச பணம் பரிமாறப்படலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .

நகராட்சி ஆணையர் குமரன்

சுமார் 7 : 30 மணி அளவில் கும்பகோணம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி, நந்தகோபால் தலைமையிலான ஒரு டீம் ரகசிய கூட்டம் நடைபெற்ற அறைக்குள் திடீரென்று நுழைந்து தீவிர சோதனை நடத்தினர் .

மேலும் அங்கிருந்த நகராட்சி அதிகாரிகளிடம் தனி தனியாக விசாரணை மேற்கொண்டனர் . இறுதியாக அணைத்து அதிகாரிகளையும் வெளியேற்றிவிட்டு நகராட்சி ஆணையர் குமரன் , அவரது வாகன ஓட்டுநர் வெங்கடேசன் , நகராட்சி ஒப்பந்ததாரர் எடிசன் மற்றும் நகராட்சி உதவி பொறியாளர் மனோகரன் உள்ளிட்டோரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர் .

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் , ஆணையர் குமரனின் அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் ரூபாய் 5.08 லட்சமும் , ஒப்பந்ததாரர் எடிசனிடம் இருந்து ரூபாய் 66,000 மற்றும் உதவி பொறியாளர் மனோகரனிடமிருந்து 84,000 ரூபாய் என மொத்தமாக ரூபாய் 6.58 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர் .

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியிடம் பேசிய போது , ” நாங்கள் நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழையும் போதே எங்களை முதலில் அடையாளம் கண்டுகொண்ட ஓட்டுநர் வெங்கடேசன் அவரிடமிருந்த ரூபாய் 8,000 பணத்தை வாகனத்தை துடைக்க பயன்படுத்தும் அழுக்கு துணியில் சுற்றி குப்பை போல் வீசினார் .

பின்பு நடத்திய விசாரணையில் ஆணையர் குமரன் வீட்டிலிருந்து ருபாய் 5 லட்சம் , ஒப்பந்ததாரர் மற்றும் உதவி பொறியாளரிடமிருந்து ருபாய் 1.50 லட்சமும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார் .

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி , பெரும் பேசும் பொருளாக உள்ளது .

Share This Article
Leave a review