சொத்து பிரச்சனை காரணமாக குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு..!

2 Min Read

விருத்தாசலத்தில் வீட்டின் குடிநீர் தொட்டியில் சொத்து பிரச்சனை முன் விரோதம் காரணமாக மனித கழிவு (மலம்) கலந்ததாக விருதாச்சலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு. சொத்து பிரச்னை காரணமாக குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக வந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கடலூர் மாவட்டம், அடுத்த விருத்தாசலம் குட்டக்கார தெருவில் வசித்து வரும் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் மனைவி மகாலட்சுமிக்கும் கடந்த ஒரு வருடமாக சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. கடலூர் மாவட்டம், அடுத்த விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட குட்டைக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது (49). இவரது அண்ணன் சங்கர். சங்கர் இறந்து விட்டார்.

வெங்கடேஷ்

இவரது மனைவி மகாலட்சுமி வயது (54). இவர்கள் ஒரே காம்பவுண்டில் வசித்து வரும் நிலையில் இவர்களுக்குள் இட பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 27ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 28ம் தேதி வெங்கடேஷ் வசிக்கும் வீட்டின் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்த போது தண்ணீரில் துர்நாற்றம் வீசி உள்ளதாக தெரிகிறது.

குடிநீர் தொட்டி

இதனால் சந்தேகம் அடைந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் வீட்டிற்கு மேல் தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்கு சென்று பார்த்த போது குடிநீர் தொட்டியில் வெள்ளை நிற பனியன் துணியில் மனித கழிவை யாரோ சுருட்டி உள்ளே தண்ணீரில் போட்டுள்ளதாக தெரிகிறது.

அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் அவரது அண்ணன் மனைவி மகாலட்சுமி இதனை செய்திருக்கலாம் என விருத்தாசலம் காவல் நிலையத்தில் தனது அண்ணன் மனைவி மகாலட்சுமி தன்னுடைய வீட்டு குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்ததாக புகார் அளித்தனர்.

மனித கழிவு

இந்த புகாரின் பேரில் மகாலட்சுமி மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன், தம்பி சொத்துப் பிரச்சனையில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review