போதை தலைக்கேரிய மது போதையில் காவல் உதவி ஆய்வாளரை சட்டையைப் பிடித்து அடாவடி செய்த போதை ஆசாமி. என்னை பிடிக்க வந்த உன் சட்டைல எத்தனை ஸ்டார் யா இருக்கு.. என் போனை கண்டுபிடியா.. அரசு பேருந்துகள் அனைத்தையும் எரித்து விடுவேன் அட்ராசிட்டி செய்த போதை வாலிபரால் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பெரும் பரபரப்பு.

நாமக்கல் மாவட்டம், அடுத்த ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் ராசிபுரம் போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான 52 Lss பேருந்து சேலம் செல்ல தயாராக நின்று இருந்தது. அதில் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் உணவு அருந்தி கொண்டிருந்தனர். இந்த நிலையில் மது போதையில் டீக்கடையில் இருந்த வந்த ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பகுதியைச் சேர்ந்த மணி என்ற இளைஞர் மதுபோதையில் பேருந்தில் ஏறி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓட்டுனரை கழுத்தைப் பிடித்து தாக்கி என் செல்போன் எங்கே என மிரட்டி உள்ளார்.

மேலும் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட போதை வாலிபர் குறித்து இராசிபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது தகவலின் அடிப்படையில் வந்த காவல் உதவியாளர் ஜெயக்குமார் என்பவரின் சட்டையை பிடித்து என்னை பிடிக்க வந்த உனக்கு எத்தனை ஸ்டார் யா இருக்கிறது என மது போதையில் கேட்டதுடன் அவரின் தோல் சட்டையை தூக்கிப் பார்த்து ரகலையில் ஈடுபட்டார் போதை ஆசாமி.

அப்போது பல பேர் பிடித்தும் அடக்க முடியாத மது போதை ஆசாமியை ஒரு வழியாக ராசிபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ரகலையில் ஈடுபட்ட போதை ஆசாமி கழுத்தை அழுத்ததில் காயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.