தீபாவளி பண்டிகை கடந்த 12 ஆம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசு, பலகாரங்கள் என கொண்டாடி மகிழ்ந்தனர் மக்கள்.அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இளைஞர்கள் சிலர் புத்தாடை அணிந்துக் கொண்டு பட்டாசு வெடித்தபடியே தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இந்த நிலையில் அந்த இளைஞர்கள் சிலர் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதாவது திருச்சி புறநகர் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் வாண வேடிக்கை உள்ளிட்ட பட்டாசுகளை முன் பக்கம் வைத்து வெடித்தபடியே பயணித்தனர். பார்பதற்கே அச்சமாக இருந்தது.

இதை காண்போருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிலும் ஒரு இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தின் முன்பு வெடியை கட்டிக் கொண்டு அதை கொளுத்தியவுடன் இரு சக்கர வாகனத்தில் வீலிங் எனும் சாகசத்தை செய்த காட்சிகள் வைரலாகின. இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட இளைஞர்களே வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். திருச்சியில் பைக்கில் வீலிங் செய்தபடி பட்டாசு வெடித்து அலப்பறை.. வீடியோ எடுத்த இளைஞரை கைது செய்த போலீஸ் அது போல் இரு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு சரவெடியை கொளுத்தி அதை சுழற்றியபடியே வெடிக்க செய்த காட்சிகளும் பதிவாகின. ஸ்டென்ட்,சாகசம், வீலிங் செய்யக் கூடாது என போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இவர்களது வீடியோ திருச்சி எஸ்.பி வரை சென்றது.
இதையடுத்து இந்த வீடியோவை பதிவட்டது யார் என பார்த்த போது அஜய் என்ற 21 வயது இளைஞர் என தெரியவந்தது. இதையடுத்து திருச்சி மாநகர போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் வீலிங் செய்ததாக லால்குடி, சமயபுரம், காணக்கிளியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீலிங்கில் ஈடுபட்ட மேலும் 4 பேர் உள்பட மொத்தம் 8 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
திருச்சி மாநகரில் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும், வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒட்டுனர் உரிமம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.