தற்போது அதிக அளவில் ஆன்லைன் மூலமாக கோழி விளம்பரங்கள் செல்போன்களுக்கு வருகின்றது. இது போன்ற போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து பொதுமக்கள் தங்களுடைய கிரெடிட் கார்டு டெபிட் கார்டு விவரங்களை ஓடிபி சிவிபி காலாவதியான தேதி எண்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை என வரும் போலி லிங்க் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

அதோடு பர்சனல் லோன் ஆப்புகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டாம். அதுபோல பரிசுகள் விழுந்துள்ளதாக வரும் தபால்கள் தொலைபேசி குறுஞ்செய்திகள் ஆகியவற்றை நம்ப வேண்டாம். ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலை என வரும் போலி லிங்க் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். அதுபோல பரிசுகள் விழுந்திருப்பதாக கூறி உங்கள் வீட்டிற்கு வரும் உங்களுக்கான தபால்களை வாங்க வேண்டாம். Telegram முகநூல் instagram போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனங்களை வாங்க வேண்டாம் .
ராணுவ பழைய பொருள் வாகனங்கள் விற்பனை என சில மையம் அறியாமையில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரை கூறி பொய்யான முதலீடு செய்ய சொல்லி பரதேசி மூலம் அழைப்பு விடுத்து பணம் செலுத்து கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள். மேலும் பொதுமக்கள் தங்களது செல்போனில் உள்ள ப்ரொபைல் டிபியில் தங்களுடைய புகைப்படத்தை வைக்க வேண்டாம். உங்களுடைய புகைப்படத்தை யாரேனும் பயன்படுத்தி வார்த்தை செய்து பணம் பறிக்கப்படும்.

இன்ஸ்டாகிராம் ஐஎம்ஓ போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது. முகநூல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் உங்களுக்கு தெரிந்த நபர்கள் வங்கி கணக்கு எண்களை பண உதவி கேட்டு வரும் செய்திகளை கேட்டு நம்பி பண உதவி செய்து ஏமாற வேண்டாம். ஏடிஎம் அட்டையை பயன்படுத்தும் போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏடிஎம் அட்டையின் பின் எண்ணை கொடுத்து பணம் எடுத்து கொடுக்குமாறு கேட்கக் கூடாது.
ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நம்பி முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். கூகுள் சர்ச் தளத்தில் வாடிக்கையாளர் சேவை அரசு வெப்சைட் போல 12 ஆயிரம் போலியான வெப்சைட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதை தவறுதலாக பயன்படுத்தி ஏமாற வேண்டாம். மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.