என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் – நடிகர் ராகவா லாரன்ஸ்..!

1 Min Read

மாற்றம் அறக்கட்டளை மூலம் கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விவாசயம் செய்ய டிராக்டர் வழங்கினார். ஊர் மக்கள் அவருக்கு மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து கருப்பு எம்.ஜி.ஆர் என கோஷமிட்டனர். அப்போது பேசிய அவர்;-

- Advertisement -
Ad imageAd image
நடிகர் ராகவா லாரன்ஸ்

நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்கு சேவை எண்ணம் தோன்றினால் போதும் என்றும், என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் என அவர் மேடையில் அப்பகுதி பொதுமக்களிடம் பேசினார்.

என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் – நடிகர் ராகவா லாரன்ஸ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் செல்லும் இடத்தில் சில பேர் என்னை, அன்னை தெரேசா , எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் இதயத்தில் வைத்து கொள்வேன். தலையில் வைத்து கொள்ள மாட்டேன் எனவும் விவசாயம் வளர வேண்டும்.

நடிகர் ராகவா லாரன்ஸ்

ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டு இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். மேலும் எங்களுடன் இணைந்து பணியாற்றி சேவை செய்பவர்கள் எங்கள் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share This Article
Leave a review